போஸ் செய்த பித்தலாட்டத்தை கண்டுபிடித்த சேது, அடுத்து நடக்கப்போவது என்ன... சின்ன மருமகள் சீரியல் புரொமோ
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்களில் ஒன்றாக உள்ளது சின்ன மருமகள் சீரியல்.
படிக்க ஆசைப்படும் ஒரு பெண் எதிர்ப்பாரா விதமாக திருமண வாழ்க்கையை தொடங்க அதனால் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை இந்த தொடர் காட்டி வருகிறது. இப்போது கதையில் மலரை பிரிந்த போஸ் இப்போது மறுமணத்திற்கு தயாராகிவிட்டார்.

அவர் எல்லோரின் உயிரையும் காப்பாற்ற காட்டிற்குள் சென்று மருந்து கொண்டு வந்ததால் அவர் செய்த தவறுகளை மறந்து குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
புரொமோ
திருமணம் செய்யப்போகும் போஸ் தொழில் தொடங்க அவருக்கு ரூ. 1 கோடி வேறு கொடுக்க போகிறார்கள்.

ஆனால் அந்த செக் உன் கைக்கு வராது என தமிழ்ச்செல்வி ஏற்கெனவே சவால் விட்டுள்ளார். இதற்கு இடையில் சேதுவுடன் மது அருந்திய போஸ் மருந்து எடுத்துவந்த விஷயம் குறித்து உளருகிறார்.
இதனால் சேது, போஸ் ஏதோ பித்தலாட்டம் செய்துள்ளான், அதனை கண்டுபிடித்தாக வேண்டும் என பிளான் போடுகிறார். இதோ புதிய புரொமோ,