தமிழ் செல்வி பேச்சை கேட்டதால் அவமானப்பட்டு நிற்கும் ராஜாங்கம்.. சின்ன மருமகள் அடுத்த வார ப்ரோமோ

By Parthiban.A Mar 15, 2026 02:08 PM GMT
Report

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது சின்ன மருமகள். இந்த சீரியல் முடிய போகிறது என அடிக்கடி செய்திகள் வந்தாலும் தொடர்ந்து பரபரப்பாகத்தான் கதை சென்று கொண்டிருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் தமிழ் செல்வி பேச்சை கேட்டு ராஜாங்கம் செய்த விஷயத்தால் பெரிய அவமானத்தை சந்திக்கிறார். என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்.

தமிழ் செல்வி பேச்சை கேட்டதால் அவமானப்பட்டு நிற்கும் ராஜாங்கம்.. சின்ன மருமகள் அடுத்த வார ப்ரோமோ | Chinna Marumagal 16Th To 21St March 2026 Promo

அடுத்த வார ப்ரோமோ

"ஜெனி ஒருவரை விரும்புகிறாள். அவர்களை நீங்கள் தான் சேர்த்து வைக்க வேண்டும்" என தமிழ் செல்வி கூறுகிறார். அதை கேட்டு ராஜாங்கமும் நேராக ஜெனியின் அப்பாவிடம் சென்று அது பற்றி பேசுகிறார்.

"இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டால் சந்தி சிரித்துவிடும்" என ஜெனியின் அப்பா கேவலமாக பேசிவிட்டு கோபமாக போகிறார்.

இது எலெக்ஷன் நேரம், இந்த குடும்பத்தை சேர்ந்த யாரும் இனி அந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என ராஜாங்கம் கூறிவிட்டு போகிறார். ஆனால் ஈஸ்வரி இதை வைத்து வேறு ஏதோ புது சதித்திட்டம் போடுவது ப்ரொமோவில் காட்டப்பட்டிருக்கிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US