கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ
சின்ன மருமகள்
கடந்த 2024ம் வருடம் ஜனவரி மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் சின்ன மருமகள்.
12ம் வகுப்பு நல்ல படியாக படித்துமுடித்து டாக்டர் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் தமிழ். அவரை எதர்சையாக பார்த்து காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்துகொள்கிறார் சேது.
ஆனால் திருமணத்திற்கு பின் ஏகப்பட்ட பிரச்சனைகள், சண்டைகள் தான் இவர்களது வாழ்க்கையில் அதிகம்.
புரொமோ
தற்போது சேது தான் என் குழந்தைக்கு அப்பா என்பதை சொல்ல வைக்க வேண்டும் என தமிழ் ஒரு முடிவோடு ராஜாங்கம் வீட்டில் தங்கியுள்ளார். வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் தமிழ் வீட்டில் எதிர்ப்பாரா விதமாக வழுக்கி விழுகிறார்.
இதனால் அவருக்கு வயிறு வலி ஏற்பட சேது மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அவருக்கு என்ன ஆனது என்ற பதற்றத்தில் குடும்பத்தினர் மருத்துவமனையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழுக்கும் அவளது குழந்தைக்கும் எதுவும் ஆக கூடாது என வேண்டிக் கொள்கிறார் சேது.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
