சேது-தமிழ்ச்செல்வி குழந்தையை கடத்தியது யார்?... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ...
சின்ன மருமகள்
படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சின்ன மருமகள்.
தமிழ்ச்செல்வி படிக்க ஆசைப்பட குடும்ப சூழ்நிலையால் அவருக்கு திருமணம் நடக்கிறது, அதனால் அவர் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார். கடைசியில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவனே வேண்டாம் என தலைமூழ்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

சேதுவும் தமிழ்ச்செல்வி மீது உள்ள கோபத்தில் ஐஸ்வர்யாவை மறுமணம் செய்துகொண்டார். தமிழ்ச்செல்விக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தது. அதில் ஆண் பிள்ளையை அப்பத்தா சேதுவின் திருமண பரிசாக அவரிடம் கொடுத்துவிட்டார்.

புரொமோ
இந்த வார எபிசோடின் புரொமோவில், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற ஆண் குழந்தை காணாமல் போகிறது. இந்த செய்தியை கேட்டு சேது செம கோபம் அடைகிறார், தமிழ்ச்செல்வியை சந்தேகப்படுகிறார்.

பின் இருவரும் தங்களின் குழந்தையை தேடுகிறார்கள், அடுத்து என்ன நடக்கப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம். இதோ புரொமோ,