புதிய கார் வாங்கியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை பானு... அவரே வெளியிட்ட வீடியோ
சின்ன மருமகள்
கிராமத்தில் 12ம் வகுப்பு படிக்கு மாணவி குடும்ப சூழல் காரணமாக பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொள்கிறார்.
திருமணத்திற்கு பிறகு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சின்ன மருமகள் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் நவீன்குமார் நாயகனாக நடிக்க ஸ்வேதா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் வி.ஆர்.திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
கதையில் தமிழ்ச்செல்வியை சுத்தமாக வெறுக்கிறேன், எனக்கு வேறொரு திருமணம் செய்து வையுங்கள் என தனது தந்தையிடம் கூற அவரது அப்பத்தா, மலர் என அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

புதிய கார்
கதைக்களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க இப்போது சின்ன மருமகள் சீரியல் நடிகை ஒருவர் சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது இந்த சீரியலில் ராஜாங்கம் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் பானு சமீபத்தில் புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார்.

தனது வீட்டிற்கு புதிய கார் வந்ததும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் - பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! IBC Tamilnadu