சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் தற்போது, ஆறுமுகம் - கண்மணி திருமணம் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையே நடந்து முடிந்துவிட்டது.

தன மகள் கண்மணி வாழ்க்கையில் நடந்ததை நினைத்து கோபத்தில் கொந்தளித்து இருக்கிறார் ராஜாங்கம். இந்த சமயத்தில் ஈஸ்வரி, நான் வேண்டுமென எதுவும் செய்யவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.
கோபத்தில் அவரை ராஜாங்கம் திட்டிக்கொண்டு இருக்க, ஈஸ்வரியின் கணவர், சாட்டை எடுத்துவந்து தன் மனைவி, மகள் இருவரையும் அடிக்கிறார். அதோடு வீட்டை வீட்டு அவர்களை வெளியேற்றுகிறார்.

இந்த நிலையில், நம் வீட்டிற்கு வந்த பிரச்சனையை தமிழ் செல்வி தான் தீர்த்து வைத்தார். அவள்தான் நம் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள், அவளுக்கு விவாகரத்து கொடுத்து அனுப்பி வைக்க வேண்டாம் என சொல்கிறார்.
அப்பத்தா மரணம்
இப்படி ஒரு சூழலில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், தமிழ் செல்விக்கு துணையாக இருந்த அப்பத்தா மரணடைந்துள்ளார். அப்பத்தா கதாபாத்திரம் இறந்துவிடுவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 இந்திய பாடல்களில் ஒரு தமிழ் பாடல்! எதுன்னு தெரியுமா? IBC Tamilnadu