குழந்தையை முன்வைத்த அப்பத்தா விடுத்த கெடு, சேது செய்தது என்ன?... சின்ன மருமகள் சீரியல்
சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது சின்ன மருமகள் சீரியல்.
தமிழ்ச்செல்வி, தன்னை எப்போதும் சந்தேகப்படும் சேது தனக்கு வேண்டாம் என எல்லாவற்றையும் அறுத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். கடைசியில் விபத்தில் சிக்கியிருந்த தமிழ்ச்செல்வியை சேது தான் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து மகன் பிறப்பதையும் பார்த்துள்ளார்.
அதன்பின் மண்டபம் சென்றவர் ஐஸ்வர்யா கழுத்தில் தாலியையும் கட்டிவிட்டார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், இரட்டை குழந்தையில் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பத்தா மண்டபம் சென்று புதுமாப்பிள்ளை சேதுவிற்கு பரிசாக ஆண் குழந்தையை கொடுக்கிறார்.
அங்கு நான் அப்பனிடம் சேர்த்துவிட்டேன், இந்த குழந்தையை நான் எடுத்துக்கொண்டு செல்ல மாட்டேன். நீங்கள் குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் குழந்தையை அனாதை ஆசீரமத்தில் சேர்த்துவிடுகிறேன் என்கிறார்.

இந்த குழந்தையை யாரும் தூக்கவில்லை என்றால் அனாதை ஆசிரமம் தான் என கூற கடைசி வரை சேது குழந்தையை தூக்க மறுக்கிறார்.
அதைக்கேட்டு குடும்பத்தினர் ஷாக் ஆகிறார்கள், பின் சேதுவின் சித்தி அந்த குழந்தையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் சேது கடைசி வரை அந்த குழந்தை பக்கம் கூட வரவில்லை.