விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு வந்த முக்கிய செய்தி.. என்ன தெரியுமா?
சின்ன மருமகள்
நவீன்குமார் மற்றும் ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சின்ன மருமகள்.
மனோஜ் குமார் இயக்க எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் கீழ் குஷ்மாவதி தயாரித்துள்ளார். படிக்க ஆசைப்படும் ஒரு பள்ளி பருவ பெண்ணை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்.
தனது குடும்ப வாழ்க்கை பிரச்சனையும் தாண்டி அவர் எப்படி தனது படிப்பை தொடர்கிறார், வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார் என்பதே மீதிக்கதையாக இருக்கும் என தெரிகிறது.
குடும்பத்தினருக்கு தெரியவந்த காவேரியின் Contract திருமணம், காவேரியை கிளம்ப சொன்ன விஜய்.. மகாநதி சீரியல் புரொமோ
நேரம் மாற்றம்
இந்த வாரத்துடன் பிக்பாஸ் 8 சீசன் முடிவுக்கு வரப்போகிறது. எனவே விஜய் தொலைக்காட்சியில் புத்தம் புதிய தொடர்கள் களமிறங்க சில பழைய சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது.
அப்படி சிறகடிக்க ஆசை சீரியல் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம். அதேபோல் தற்போது சின்ன மருமகள் தொடர் வரும் ஜனவரி 27ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.