சாப்பாட்டில் மயக்க மருந்து... இந்துவுக்கு காத்திருக்கும் சிக்கல்! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்

By Karthick Raja Aug 31, 2026 09:50 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த எபிசோடில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்து அன்புடன் உணவு சமைத்து எடுத்துச் சென்றிருந்த நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேற உள்ளன.

அதன்படி, இந்து சமைத்த உணவில் வாந்தி, பேதி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்து எதுவும் அறியாத இந்து, அந்த உணவை ஆதரவற்ற குழந்தைகளிடம் கொண்டு செல்கிறாள்.

சாப்பாட்டில் மயக்க மருந்து... இந்துவுக்கு காத்திருக்கும் சிக்கல்! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் | Chinnan Siru Kiliye Serial Today Episode

மறுபக்கம், விஷ்வா பசிக்கிறது என்று கூறியதும், சுகுணா இந்து சமைத்த உணவை அவனுக்கு பரிமாறுகிறாள். விஷ்வாவும் அந்த உணவை சாப்பிடத் தொடங்க, இதைப் பார்த்த புவனா அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்திருப்பதை விஷ்வாவிடம் கூறி, குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இந்துவே குற்றவாளியாகி கைது செய்யப்படுவாள் என்ற தனது திட்டத்தை வெளிப்படுத்துகிறாள். அதன்பின் விஷ்வாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாள்.

இந்நிலையில் கர்ணாவும் பசிப்பதாக வந்து உணவு கேட்க, சுகுணா மற்றும் ஜெயந்தி அதே உணவை அவனுக்கும் கொடுக்கிறார்கள். கர்ணாவும் அதை சாப்பிடத் தொடங்கியதும் புவனா மீண்டும் அதிர்ச்சியில் உறைகிறாள்.

சாப்பாட்டில் மயக்க மருந்து... இந்துவுக்கு காத்திருக்கும் சிக்கல்! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் | Chinnan Siru Kiliye Serial Today Episode

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? இந்து புதிய சிக்கலில் சிக்கிக்கொள்ளப் போகிறாளா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதிலை அறிய, சின்னஞ்சிறு கிளியே தொடரை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US