கர்ணா வாங்கிய சத்தியம்.. கண்ணீரில் இந்து - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கர்ணா தற்கொலைக்கு முயன்ற தீபாவை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சந்தோஷ் என்பவன் தனது போட்டோக்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் இந்து வேண்டும் என கேட்பதாகவும் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு கர்ணா அதிர்ச்சி அடைகிறான்.

அந்த சந்தோஷுக்கு போன போட்டு இங்க வர சொல்லு என்று சொல்ல தீபாவை சந்திக்க வந்த சந்தோஷ் எங்க நான் கேட்ட இந்து என கேட்க கர்ணா அங்கு மாஸாக என்று கொடுத்து அவனை அடித்து துவைத்து அவனிடமிருந்த ஆதாரங்களை அழிக்கிறான்.
பிறகு தீபாவிடம் இங்கு நடந்த எந்த ஒரு விஷயமும் இந்துவுக்கு தெரியக்கூடாது என சத்தியம் வாங்குகிறான். மேலும் வீட்டுக்கு வரும் கர்ணாவின் சட்டை எல்லாம் கிழிந்திருக்க கிருபா என்னாச்சு என்று கேட்க ஒரு ஆக்சிடென்ட் என்று சொல்கிறான். உன்னை அனுப்பிட்டு நான் இங்க பயந்துட்டு இருந்தேன் என கிருபா நல்லவன் வேஷம் போடுகிறார்.

பிறகு இந்து அங்கு வந்து என்னாச்சு என்று கேட்க கர்ணா அவளிடம் உண்மையை சொல்லாமல் முகத்தை காட்ட இருவருக்கும் இடையே சண்டை வருவதை பார்த்து திவாகரன் கிருபா ஆகியோர் சந்தோஷப்படுகின்றனர். பிறகு கர்ணா ரூமுக்கு வந்ததும் இந்து மீண்டும் அவனிடம் என்னாச்சு என்று கேட்க கர்ணா மீண்டும் முகத்தை காட்டி அங்கிருந்து நகர்ந்து செல்ல இந்து கண் கலக்குகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri