கருவை கலைக்க திட்டமிடும் திவாகரன்.. இந்துவுக்கு ஆபத்து! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. நேற்றைய எபிசோடில், இந்து அக்கறையுடன் கர்ணாவுக்காக சூப் செய்து கொடுத்த நிலையில், அதை குடிக்க மறுத்த கர்ணா பின்னர் மனம் மாறியிருந்தான். இதனைத் தொடர்ந்து இன்று கதையில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுகின்றன.
அதாவது, இந்து "வேணும்னா புவனாவை கூப்பிட்டு கொடுக்க சொல்லட்டுமா?" என்று கேட்க, கர்ணா உடனே "வேண்டாம், நானே குடிக்கிறேன்" என்று கூறி சூப்பை வாங்கிக் குடிக்கிறான்.

மறுபக்கம், இந்துவின் கர்ப்பத்தை உண்மை என நினைத்து எப்படியாவது கலைக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் இருக்கும் கிருபாவும் திவாகரனும் புதிய சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதற்காக கர்ணாவை ஒரு முக்கிய வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லும்படி ஏற்பாடு செய்கின்றனர்.
கர்ணா வெளியே சென்ற பிறகு, இந்துவுக்குக் கொடுக்கப்படும் ஜூஸில் கருக்கலைப்பை ஏற்படுத்தும் மருந்தைக் கலக்க திட்டமிடுகின்றனர். பின்னர் வீட்டில் அனைவருக்கும் ஜூஸ் வழங்கப்படும் நேரத்தில், சித்ரா ஏன் இந்த அக்காவுக்கு மட்டும் கொடுக்க மாட்டுறீங்க என்று கேட்க தங்களது திட்டத்தின்படி அந்த ஜூஸை இந்துவிடம் கொடுக்கின்றனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக, ஜூஸ் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இந்து அதை உடனடியாக குடிக்காமல் வைத்திருக்கிறாள். அந்த சமயத்தில் ஜெயந்தி அந்த ஜூஸை எடுத்துக் குடிக்க முயற்சிக்க, பதறிப்போன திவாகரன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான். அவனுடைய அதிரடி நடவடிக்கையை பார்த்த இந்துவுக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது.
இதையடுத்து ஜூஸை தனது அறைக்கு எடுத்துச் செல்லும் இந்து, "இதில் ஏதோ கலந்திருக்கிற மாதிரி இருக்கு" என்ற சந்தேகத்துடன் செல்வியிடம் போன் செய்து பேசுகிறாள்.

இந்து நினைப்பது போல அந்த ஜூஸில் உண்மையிலேயே ஏதாவது கலந்திருக்கிறதா? திவாகரனின் சதித்திட்டம் அம்பலமாகுமா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது.
பதற்றமும் பரபரப்பும் நிறைந்த இந்த காட்சிகளை காண, சின்னஞ்சிறு கிளியே சீரியலை இன்று இரவு 7 மணிக்கு Zee தமிழில் தவறாமல் பாருங்கள்!
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri