ரஜினியின் மகளை தொடர்ந்து கணவரை பிரியும் சிரஞ்சீவியின் மகள்! கிளம்பிய புதிய சர்ச்சை..
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா அவரின் கணவரும் நடிகருமான தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அறிவித்து இருந்தார்.
இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது, மேலும் இதற்கான காரணம் குறித்தும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.
இதனிடையே நடிகர் ரஜினியின் மகளை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகளும் விவாகரத்து செய்யவுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா நடிகர் கல்யாண் தேவ் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீஜா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீஜா கல்யாண் என்ற பெயரை மாற்றி அவரின் குடும்ப பெயரான ஸ்ரீஜா கொனிடேலா என வைத்துள்ளார்.
கல்யாண் தேவையும் ஸ்ரீஜா பின்தொடரவில்லை. இதனால் தற்போது அவர்கள் பிரியவுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
மேலும் கல்யாண் தேவை ஸ்ரீஜா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
