நடிகர் சிரஞ்சீவியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அந்த அழகிய புகைப்படம்
தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சிரஞ்சீவி.
இவர் நடிப்பில் தற்போதும் ஆண்டுக்கு ஒரு படம் வெளியாகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் 'சைரா நரசிம்மா ரெட்டி' படம் வெளியாகி இருந்தது.
இதன்பின், தற்போது சிரஞ்சீவியின் கைவசம் ஆச்சார்யா, காட் பாதர், போலா ஷங்கர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
நடிகர் சிரஞ்சீவி 1980ஆம் ஆண்டு சுரேகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராம் சரண், சுஷ்மிதா, ஸ்ரீஜா என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் ராம் சரண் தெலுங்கு திரையுலகில் தந்தையை போலவே முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி, சுரேகாவின் திருமண புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..