32 வயது நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் விஸ்வம்பரா. இப்படத்தில் திரிஷா இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதை தொடர்ந்து மனசங்கர வரப்பிரசாத் காரு எனும் படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து வால்டர் வீரய்யா பட இயக்குநர் பாபியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார் சிரஞ்சீவி. இப்படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாளவிகா மோகனன்
இந்த நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 32 வயதாகும் நடிகை மாளவிகா, 70 வயதாகும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
மாளவிகா மோகனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்தது. இப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.