வேதாளம் படத்தை இந்த ஒரு காரணத்துக்காக ரீமேக் செய்தேன்.. சிரஞ்சீவி பதிலடி
போலா ஷங்கர்
அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடித்து இருந்த வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கின்றனர். அதில் சிரஞ்சீவி மற்றும் அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கின்றனர்.
இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை 11 ஆகஸ்ட் அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது போலா ஷங்கர் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடந்து இருக்கிறது.
ட்ரோல்களுக்கு பதில் சொன்ன சிரஞ்சீவி
சிரஞ்சீவி தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருவதால் அதை நிறுத்திவிட்டு ஒரிஜினல் படங்களில் நடிக்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அடுத்து சிரஞ்சீவி ப்ரோ டாடி என்ற மலையாள படத்தை ரீமேக் செய்கிறார்.
போலா ஷங்கர் பட விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர், 'வேதாளம் எனக்கு பிடித்து இருந்தது. அது உங்களுக்கும் பிடிக்கும் என நினைத்தேன். ஓடிடி வந்த பிறகு ரீமேக் எல்லாம் எதற்கு என கேட்கிறார்கள்.'
'வேதாளம் எந்த ஓடிடி தளத்திலும் இல்லை. அதனால் தான் அதனை ரிமேக் செய்ய confidence வந்தது. இது தான் ஒரே காரணம்' என சிரஞ்சீவி கூறி இருக்கிறார்.
நீச்சல் உடையில் மாளவிகா மோகனன்! எல்லைமீறிய கவர்ச்சி ஸ்டில்கள் வைரல்

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
