முதல் முறையாக ஆஸ்கர் விருதை கைப்பற்ற போகும் கிறிஸ்டோபர் நோலன்.. போட்டிக்கு வரும் 81 வயது நட்சத்திரம்
Oppenheimer - கிறிஸ்டோபர் நோலன்
கடந்த ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் Oppenheimer. Cillian Murphy, Florence Pugh, Robert Downey Jr. மற்றும் Emily Bluntஉள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து இப்படம் வெளிவந்தது.
எப்போதுமே கிறிஸ்டோபர் நோலன் திரைப்படம் என்றால் குழப்பான திரைக்கதை இருக்கும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கும். ஆனால், Oppenheimer திரைப்படத்தை தன்னுடைய ஸ்டைலில் இருந்து சற்று மாறுபட்டு ஆவனத்திரைப்படமாக உருவாக்கி இருந்தார்.
Cillian Murphy மற்றும் Robert Downey Jr. என இருவருக்கும் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது போல் படம் வெளிவந்த சமயத்தில் பேச்சு அடிபட்டது.
ஆஸ்கர்
இந்நிலையில், தற்போது Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குனர் என கிறிஸ்டோபர் நோலனுக்கு கோல்டன் குளோப் விருது கொடுக்கப்படவுள்ளது. அதே போல் Cillian Murphy-க்கும் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியில் இருக்கும் விருது தான் கோல்டன் குளோப் விருது. இந்த விருதை கிறிஸ்டோபர் நோலன் கைப்பற்றியுள்ள நிலையில், கண்டிப்பாக அடுத்த ஆண்டு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதும் கிறிஸ்டோபர் நோலனுக்கு தான் கிடைக்கும் என கூறப்படுகிறது.
போட்டிக்கு வரும் 81 வயது நட்சத்திரம்
ஆனால், சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் கிறிஸ்டோபர் நோலனுக்கு போட்டியாக இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசியும் இடம்பிடித்துள்ளார். Killers of the Flower Moon என்கிற படத்திற்காக மார்ட்டின் ஸ்கோர்செசிக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைக்கும் என மறுபக்கம் கூறப்படுகிறது.
ஆகையால் இவர்கள் இருவரில் யார் 2024ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் சிறந்த இயக்குனர் விருதை கைப்பற்ற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.