ஸ்ரீகாந்த் என் பள்ளி கால ஹீரோ.. சித்தி 2 அம்மா நடிகைக்கு இவ்ளோ குறைவான வயதா?
சன் டிவியில் சித்தி 2 மற்றும் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல்களில் அம்மா ரோல்களில் நடித்து வருகிறார் மீரா கிருஷ்ணா. அவரது நடிப்புக்கு தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிமமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று மீரா கிருஷ்ணா இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்தை அவர் விமான நிலையத்தில் சந்தித்தபோது எடுத்த போட்டோ தான் அது.
"It was an immense pleasure meeting my school and college days hero" என குறிப்பிட்டு இருக்கிறார் அவர். ஸ்ரீகாந்த் உங்க பள்ளி கால ஹீரோ என்றால் நீங்க 90ஸ் கிட்ஸ் தானா, உங்களை 70ஸ் கிட்ஸ் என நினைத்திருந்தோம் என பலரும் ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
மீராவுக்கு அவ்வளவு வயது குறைவா, இல்லை ஸ்ரீகாந்துக்கு அதிகம் வயதாகிவிட்டதா எனவும் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.