முடிவுக்கு வந்தது சித்தி 2 சீரியல்- கடைசி நாள் படப்பிடிப்பில் பிரபலங்கள் கொண்டாட்டம், வெளிவந்த புகைப்படங்கள்
சன் தொலைக்காட்சியில் இதுவரை லட்சக் கணக்கான தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. மக்களால் மறக்க முடியாத சில தொடர்கள் கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தது.
இதில் படு ஹிட்டடித்த இப்போதும் மக்களால் மறக்கவே முடியாத தொடராக இருக்கிறது சித்தி 2.
சித்தி 2 ஆரம்பம்
ராடன் மீடியா ஒர்க்ஸ் பேனரில் ராதிகா சரத்குமார் தயாரித்த இந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த ஜனவரி 27ம் தேதி 2020ம் ஆண்டு ஒளிபரப்பானது. முக்கிய வேடத்தில் நடித்துவந்த ராதிகா இடையில் நடிப்பதை நிறுத்தினார்.
பின் ப்ரீத்தி, நந்தன் ஆகியோரை முன்னிலைப்படுத்தி தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்டதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில் சித்தி 2 கடைசி நாள் படப்பிடிப்பில் பிரபலங்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
11 நாள் முடிவில் உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- சூப்பர் கலெக்ஷன்