சித்தி 2 சீரியலில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய மாற்றம்- பரபரப்பு புரொமோ
சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. நடிகை ராதிகாவே இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.
ஆனால் அவர் திடீரென இனி நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்து அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். ராதிகா சென்ற பிறகு கவின்-வெண்பா இருவரை சுற்றிய காட்சிகள் அதிகம் வர ஆரம்பித்தன.
கடந்த சில நாட்களாகவே சித்தி 2 சீரியலில் பெரிய மாற்றம் வரப்போகிறது, புதிதாக ஒரு பிரபலம் வரப்போகிறார் என்கிற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது அந்த பிரபலம் யார் என்ற பரபரப்பு புரொமோவும் வெளியாகியுள்ளது. இந்த சீரியலின் கதாநாயகன் கவின் இரட்டையர் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
அவரது லுக்கின் புரொமோக்கள் வெளியாக ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.