மகள் இறந்து 12 ஆண்டுகள் ஆனது, புகைப்படம் பதிவிட்டு பாடகி சித்ரா போட்ட உருக்கமான பதிவு- வருந்தும் ரசிகர்கள்
பாடகி சித்ரா
சின்னக் குயில் சித்ராவாக என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடகியாக இருப்பவர் சித்ரா. பல்வேறு மொழிகளில் 25,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.
6 முறை தேசிய விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ள சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
அண்மையில் கூட விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அம்மா சென்டிமென்ட் கொண்ட ஒரு பாடலை பாடியிருந்தார்.
மகள் நினைவு நாள்
பாடகி சித்ரா அவர்கள் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார், பெயர் நந்தனா. 2011ம் ஆண்டு சித்ரா அவர்கள் துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது நீச்சல் குளத்தில் மூழ்கி அவரது மகள் உயிரிழந்தார். அன்றிலிருந்து சித்ரா தனது மகள் பெயரில் நிறைய குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
நேற்றோடு அவரது மகள் நினைவு நாள் வந்துள்ளது, மகளின் புகைப்படத்தை பதிவிட்டு பாடகி சித்ரா எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அவரது பதிவிற்கு ரசிகர்கள் அனைவரும் வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ராகவா லாரன்ஸின் ருத்ரன் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?- இத்தனை கோடியா?

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
