KGF பட பாணியில் சீயான் 61 ! விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படத்தின் மாஸ் தகவல்..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் மகான் படங்கள் உருவாகி வந்தன.
இதில் மகான் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோப்ரா படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் தான் விக்ரம் முடித்திருந்தார்.
இதனிடையே விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், சீயான் 61 படத்திற்காக அந்த மாஸ் கூட்டணி இணைந்தது.
இந்நிலையில் தற்போது சீயான் 61 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சீயான் 61 திரைப்படம் கோலார் தங்க சுரங்கம் குறித்த கதைக்களமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் இப்படம் செம ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாம். KGF திரைப்படமும் இதேபோல் கோலார் தங்க சுரங்கம் குறித்த படம் தான் குறிப்பிடத்தக்கது.