பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் படத்தில் இவர் இணைகிறாரா..? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
முன்னணி கதாநாயகராக தமிழ் சினிமாவை கடந்து அறியப்படுபவர் சீயான் விக்ரம்.
தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கட்டி போடும் அசாத்திய நடிகனான விக்ரம், கடைசியாக கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக மகான் எனும் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் விக்ரம், இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விக்ரம், கோலிவுட் சினிமாவின் சென்சேஷன் இயக்குனரான பா.ரஞ்சித் படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.
ஆனால் இது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.