சீயான் 60 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. படக்குழுவினர் கொண்டாட்டம்
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் சியான் 60.
இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக முழுவீச்சில் நடைபெற்று வந்த சியான் 60 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
இதையடுத்து இப்படத்தின் பின்னணி பணிகளை தொடங்க உள்ளனர். விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri