காயத்ரியிடம் மன்னிப்பு கேட்ட சோழன்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில், தனது மனைவி நிலாவை கடுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு காயத்ரி என்கிற பெண்ணை காதலிப்பது போல் நடித்தார் சோழன்.

ஆனால், காயத்ரி உண்மையாகவே சோழனை காதலிக்க இது மிகப்பெரிய சிக்கலாக வந்து நின்றது. இதிலிருந்து எப்படி வெளியே வருவது என தடுமாறி நின்றுகொண்டிருந்தார் சோழன். அந்த சமயத்தில் காயத்ரி வீட்டிற்கே சென்று, நிலைமையை எடுத்து கூறி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார் நிலா.
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ
மன்னிப்பு கேட்ட சோழன்
இதன்பின், அப்பாடி எப்படியோ பிரச்சனையிலிருந்து தப்பிவிட்டோம் என நிம்மதியாக இருந்தார் சோழன். இந்த நிலையில், தான் செய்த தவறுக்காக தற்போது காயத்ரியிடம் சென்று தனது மன்னிப்பை கேட்டுள்ளார். அந்த புரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

காயத்ரியிடம் மன்னிப்பு கேட்கப்பின் நான் மிகவும் நல்லவன் என சோழன் கூற, நிலாவும் அவருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இந்த சமயத்தில் சோழனின் முதலாளி கால் செய்து பேசுகிறார். காரில் வந்த இரண்டு பெண்களிடம் நீ என்ன பேசுன, உன்மேல் புகாரா வருது சோழா என கூறுகிறார். இதை கேட்டவுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சோழனை பார்த்து கோபப்படுகிறார்கள்.