நிலா காலில் விழுந்த சோழன்.. வீட்டுக்கு திரும்பி வந்தாரா நிலா? அய்யனார் துணை சீரியல்

By Karthick Raja May 16, 2026 04:30 AM GMT
Report

சோழன் - நிலா

சோழனுக்கு ஆக்சிடென்ட் (Accident) ஆகிவிட்டது என பதறி அடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தார் நிலா. தலை, கால், கை என ஏகப்பட்ட இடங்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோழனை பார்த்து கண்கலங்கி அழுதார்.

நிலா காலில் விழுந்த சோழன்.. வீட்டுக்கு திரும்பி வந்தாரா நிலா? அய்யனார் துணை சீரியல் | Chozhan Fell On Nila Feet In Ayyanar Thunai

மேலும், சோழன், சேரன், பாண்டியன் கேட்டுக்கொண்டதால் 6 மாதம் டைம் தருகிறேன், அதற்குள் மனம் மாறிவிட்டால் நாம் சேர்ந்து வாழ்வதை பற்றி யோசிக்கலாம், அதுவரை வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என நிலா கூறுகிறார்.

நிலா காலில் விழுந்த சோழன்.. வீட்டுக்கு திரும்பி வந்தாரா நிலா? அய்யனார் துணை சீரியல் | Chozhan Fell On Nila Feet In Ayyanar Thunai

முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நிலா மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தவுடன், அடிபட்டு கட்டுடன் இருந்த சோழன் திடீரென எழுந்து நின்றுவிட்டார். அதன்பின் தான் தெரியவந்தது இதுவும் சோழன் போட்ட நாடகம் என்று. இப்படியொரு நாடகத்தை சோழன் நடத்தியுள்ளார் என்று தெரிந்தவுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நிலா என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டனர்.

காலில் விழுந்த சோழன்

இவருக்காகவே நான் மனம் இறங்கி வந்து 6 மாதம் டைம் கொடுத்தேன் என கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினார் நிலா. ஆனால், நிலாவை அங்கிருந்து சோழன் செல்ல விடவில்லை. அவருடைய வழியை மறித்து தொடர்ந்து மன்னிப்பு கேட்டு கொண்டே இருந்தார்.

நிலா காலில் விழுந்த சோழன்.. வீட்டுக்கு திரும்பி வந்தாரா நிலா? அய்யனார் துணை சீரியல் | Chozhan Fell On Nila Feet In Ayyanar Thunai

ஒரு கட்டத்தில் நிலாவின் காலில் விழுந்துவிட்டார். பின் அனைவருக்காகவும் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு நிலா சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவே சோழனுக்கு நான் கொடுக்கும் கடைசி வாய்ப்பு என்றும், இதில் ஏதாவது தவறு நடந்தால் நான் வீட்டை விட்டு கிளம்பி சென்றுவிடுவேன் என்றும் நிலா உறுதியாக கூறிவிட்டார்.  

நிலா காலில் விழுந்த சோழன்.. வீட்டுக்கு திரும்பி வந்தாரா நிலா? அய்யனார் துணை சீரியல் | Chozhan Fell On Nila Feet In Ayyanar Thunai

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US