சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
அய்யனார் துணை
தமிழக மக்களால் ரசிக்கப்படும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் பட்டையை கிளப்பி வருகிறது.

கடந்த வார முடிவில், தனது ஆபிஸில் முக்கியமான ப்ரேசெண்டேஷன் இருக்கிறது, அதற்காக தனது லாப்டாப்பில் அது சம்மந்தப்பட்ட விஷயங்களை நிலா வைத்திருந்தார். ஆனால், அந்த லாப்டாப்-பை வரும் வழியில் ஆட்டோவில் விட்டுவிட்டார்.
நிலாவுக்கு உதவிய சோழன்
இதனால் நிலாவால் ப்ரேசெண்டேஷன் தர முடியாது சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. நிலாவின் ப்ரேசெண்டேஷன் செய்ய லாப்டாப் இல்லாததை அறியும் ஆபிஸ் MD ராகவ், நிலாவை திட்டி தீர்க்கிறார்.

உடனடியாக நிலா தனது லாப்டாப் அவுட்டோவில் விட்டதை சோழனிடம் கூற, அந்த லாப்டாப்பை தேடி கண்டுபிடித்து, சரியான நேரத்தில் நிலாவிடம் கொண்டு வந்து தருகிறார் சோழன். இதன்பின், தனது ப்ரேசெண்டேஷனை சரியாக செய்து பாராட்டுகளை பெறுகிறார் நிலா. பின் ஓடி வந்து சோழனை கட்டிப்பிடித்து தனது அன்பையும் வெளிப்படுத்திக்கிறார்.