நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது
அய்யனார் துணை
அய்யனார் துணை சீரியலில் கடந்த வாரம் பாண்டியன் தனது சொந்த மெக்கானிக் கடையை திறந்துவிட்டார்.

கடைக்கு தனது பெயரைதான் பாண்டியன் வைக்கப்போகிறார் என வானதி நினைத்துக்கொண்டிருந்த நிலையில், தனது அண்ணன் சேரனின் பெயரை வைத்தது வானதிக்கு வருத்தத்தை கொடுத்தது.
நிலா - சோழன் விவாகரத்து
கடை திறப்பு விழா மகிழ்ச்சியாக முடிந்த நிலையில், நிலா - சோழன் விவாகரத்து வழக்கு குறித்து கதை திரும்பியுள்ளது. நிலாவுக்கு விவாகரத்து தரக்கூடாது என சோழன் முடிவு செய்திருந்த நிலையில், நிலாவும் சற்று மனம் மாறிவந்தார்.

ஆனால், இந்த நிலையில், சோழன் நிலாவுக்கு விவாகரத்து தருகிறேன் என நீதிமன்றத்தில் கூறிவிட்டார். சோழன் இப்படி கூறியது நிலாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.