டான் பட இயக்குனருக்கு நெருக்கடி கொடுக்கும் ரஜினிகாந்த்..அதுக்கு இது தான் காரணமா ?
சிபி சக்கரவர்த்தி
நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி.
இதில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து சிபி சக்கரவர்த்தி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என்று செய்தி வெளிவந்தது. ஆனால் அதன் பின்னர் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை.
இயக்குனருக்கு நெருக்கடி
இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி ரஜினியிடம் ஆக்ஷன் கதையை கூறியுள்ளார். ஆனால் ரஜினி ஃபேமிலி சப்ஜெக்டில் கதையை மாற்ற சிபிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் சிபி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.
தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 3 பிள்ளைகளை பெற்றவரை திருமணம் செய்த நடிகை ஜெயபிரதாவின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
