முன்னணி நடிகர், நடிகையை இயக்கும் சிபி சக்ரவத்தி.. டான் வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட படத்தை இயக்க வாய்ப்பு

By Kathick Dec 06, 2023 08:00 AM GMT
Report

சிபி சக்ரவத்தி

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார்.

முன்னணி நடிகர், நடிகையை இயக்கும் சிபி சக்ரவத்தி.. டான் வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட படத்தை இயக்க வாய்ப்பு | Cibi Chakravathy New Movie Update

இப்படத்தை தொடர்ந்து சிபி சக்ரவத்தி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இதன்பின் சிபி சக்ரவத்தி பண்ணப்போகும் படம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

சலார் படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே இத்தனை கோடியா.. எவ்வளவு-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

சலார் படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே இத்தனை கோடியா.. எவ்வளவு-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

புதிய படம்

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக சிபி சக்ரவத்தியின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கில் என்ட்ரி கொடுக்கப்போகும் சிபி சக்ரவத்தி நாணி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க போகிறாராம்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

முன்னணி நடிகர், நடிகையை இயக்கும் சிபி சக்ரவத்தி.. டான் வெற்றியை தொடர்ந்து பிரமாண்ட படத்தை இயக்க வாய்ப்பு | Cibi Chakravathy New Movie Update

சிவகார்த்திகேயனின் டான் படத்தை வெற்றியை தொடர்ந்து, நாணி மற்றும் பூஜா ஹெக்டே போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் சிபி சக்ரவத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US