சிவகார்த்திகேயன் படத்திலிருந்து விலகல்.. மற்றொரு முன்னணி ஹீரோவை இயக்கும் சிபி சக்ரவத்தி
சிபி சக்ரவத்தி
கடந்த 2022ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்ரவத்தி. இவர் முன்னணி இயக்குநர் அட்லீயிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர்.
முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியடை கொடுத்த சிபி சக்ரவத்தி, அடுத்ததாக ரஜினி படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. ரஜினி படம் கைநழுவி போன நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருந்தார்.
ஆனால், அப்படமும் தற்போது கையைவிட்டு போய்விட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், சிவகார்த்திகேயன் படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவத்தி விலகிவிட்டாராம்.
சிபி சக்ரவத்தியின் அடுத்த படம்
இந்த நிலையில், அவர் இயக்கப்போகும் அடுத்த படம் என்ன, யார் ஹீரோ என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாணியிடம் கதை கூறி ஓகே செய்துவிட்டாராம் இயக்குநர் சிபி சக்ரவத்தி.
வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.