100 கோடி வசூல் செய்த டான் படம்.. இயக்குனர் சிபி சக்ரவதியின் தற்போது நிலை இதுதான்..

Kathick
in பிரபலங்கள்Report this article
டான் - சிபி சக்ரவத்தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார்.
இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல் படமே சிபி சக்ரவத்திக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிபி சக்ரவத்தி படம் இயக்க போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
இதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சிபி சக்ரவத்தி இணையப்போகிறார் என கூறப்பட்டது. அது உறுதியாக நடக்கும் என சிவகார்த்திகேயன் வாக்கு கொடுத்துள்ளாராம்.
ஆனால், தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்தபின் தான் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் நடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறாராம் சிவா.
லேட்டஸ்ட் அப்டேட்
இதனால் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதற்குமுன் வேறொரு நடிகரை வைத்து புதிய படத்தை எடுத்து முடித்துவிடலாம் என முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் சிபி சக்ரவத்தி.
அதன்படி, தெலுங்கு நடிகர் நாணி ஹீரோவாக நடிக்கும் படத்தை சிபி சக்ரவத்தி இயக்கவுள்ளாராம். இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
