திரையுலக வரலாற்றில் முதல் முறையாக படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபல சீரியலில் நடிக்கும் படக்குழுவினர்

Sathyaraj Aparna Balamurali Devayani Urvashi RJ Balaji
By Kathick 5 மாதங்கள் முன்

வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரை பக்கமே வராமல் இருந்து வந்த காலங்கள் மாறி பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைவரும் தொலைக்காட்சி சேனல்களின் பவரை புரிந்து கொண்டு தங்களின் படங்களை ப்ரமோஷன் செய்து வருகின்றனர். பொதுவாக ஒரு படத்தை ப்ரமோஷன் செய்ய படக்குழுவினர் பேட்டி கொடுப்பது, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது போன்ற விஷயங்களை தான் பல வருடங்களாக பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாக உள்ள வீட்ல விஷேசம் படத்திற்காக ஜீ தமிழ் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியை முன்னெடுக்க உள்ளது. பொதுவாக சீரியல்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் தவறாமல் சீரியல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்படியான சீரியல்கள் மூலமாக ஒரு படத்தை ப்ரமோஷன் செய்தால் அது நிச்சயம் பல லட்சம் குடும்பங்களுக்கு சென்று சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத இந்த புது யுக்தியை கையில் எடுத்து படக்குழுவினரிடம் இது குறித்து விவாதிக்க அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

திரையுலக வரலாற்றில் முதல் முறையாக படத்தின் ப்ரமோஷனுக்காக பிரபல சீரியலில் நடிக்கும் படக்குழுவினர் | Cinema Actors Acting In Serials For Promotion

ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வீட்ல விஷேசம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே 350-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் கதையில் எந்த குழப்பமும் வராமலும் சீரியல் விறுவிறுப்பை மேலும் கூட்டும் வகையிலும் படக்குழுவினர் இந்த சீரியலில் இணைந்து நடித்துள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இந்த புது முயற்சி இனி வரும் காலங்களில் மிகப்பெரிய ட்ரெண்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்‌. இப்படியொரு முயற்சியின் முழு பெருமையும் ஜீ தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்ததாகவே இருக்கும் என சொல்லலாம்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US