சினிமா நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்க கூடாது.. தயாரிப்பாளர் சங்கம் போட்ட கட்டுப்பாடு
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் ஒரு முடிவு தற்போது பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நடந்திருக்கிறது.
அந்த கூட்டத்தில் பல முடிவுகளை எடுத்து இருக்கின்றனர். ஓடிடி ரிலீஸ் என்பது 8 வாரங்கள் கழித்து தான் இருக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர். மேலும் இதற்காக ஒரு கூட்டு குழுவை அமைக்கவும் முடிவெடுக்கபட்டு இருக்கிறது.

வெப் சீரிஸ் நடிக்க கூடாது..
படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் வெப் சீரிஸில் பணியாற்ற கூடாது. அப்படி செய்தால் கூட்டு குழு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சினிமாவா, வெப் சீரிஸா என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என நடிகர்களுக்கு இப்படி கட்டுப்பாடு விதித்திருப்பது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.