பணக்கார தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ!
சினிமா நட்சத்திரங்கள் பல கோடியில் சம்பளம் பெறுவது வழக்கமான ஒன்று. இதில், சில நடிகைகள் தங்களுடன் பணிபுரியும் நடிகர்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.
மற்ற சிலர் பணக்கார தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில், தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள் யார் யார் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
கீர்த்தி சுரேஷ்:
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கொச்சியைச் சேர்ந்த தொழிலதிபரும் கட்டுமான அதிபருமான ஆண்டனி என்பவரை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஹன்சிகா மோத்வானி:
ஹன்சிகா விஜய், தனுஷ் என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை மணந்தார்.
காஜல் அகர்வால்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல். இவர் தொழில்முனைவோர் கௌதம் கிட்ச்லுவை மணந்தார். கிட்ச்லு ஒரு உள்துறை வடிவமைப்பு மற்றும் மின் வணிக முயற்சியின் நிறுவனர் ஆவார்.
அசின்:
அசின் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இவர் சினிமாவை விட்டு விலகினார்.
ஸ்ரேயா சரண்:
ஸ்ரேயா தொழில்முனைவோர் மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோஷீவை மணந்தார்.