மிக மோசமாக சண்டை போடும் விஜய், அஜித் ரசிகர்கள்! ட்விட்டரில் வெடித்த ஹேஷ்டேக் வார்
2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லாவும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.
தற்போது, 8 வருடம் கழித்து தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படமும் அஜித்தின் துணிவு 2023 பொங்கலுக்கு மோத இருக்கிறது.
வாரிசு vs துணிவு
வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "விஜய்யிடம் போனில் நான் பேசும்போது, அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகுது என்று கூறினேன்.”
”அதற்க்கு என்ன, அவர் நம்ப நண்பர் தானே வரட்டும். அவருடைய படமும் நன்றாக ஓடினால் சந்தோசம் தான் என்று விஜய் கூறினார்" என ஷாம் தெரிவித்து இருந்தார்.
துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் "விஜய், அஜித் இரண்டு நட்சத்திரங்களும் மிக கடுமையான உழைப்பால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள இரண்டு படமும் வெற்றி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ரசிகர்களின் சண்டை
விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இருவருமே மாறி மாறி சண்டை போடுவது வழக்கமான நிகழ்வு. தற்போது பாக்ஸ் ஆபிஸில் நேரடி மோதல் என்பதால் ரசிகர்களின் சண்டை எல்லை மீறி போய்விட்டது.
சமீபத்தில் வெளியான விஜய்யின் ரஞ்சிதமே பாடலைவிட தற்போது வெளியான சில்லா சில்லா பாடல் சில மணிநேரத்திலேயே அதிக லைக்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் 'துணிவில்லா-வாரிசு" மற்றும் "வாரிசிடம் குனிவு" என்ற ஹாஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லோர் முன்பும் கண்கலங்கிய கமல்! அப்பா அம்மா பற்றி பேசி உருக்கம்