நண்பர் அஜித்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

By Karthick Raja Sep 08, 2026 09:00 AM GMT
Report

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டனுக்கு செல்லவிருக்கும் நிலையில், அன்று கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்தை நேரில் சந்திக்கபோவதாக கூறப்படுகிறது.

பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம்

பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம்

முதலமைச்சர் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார். விஜய்யின் தவெக அரசு பொறுப்பேற்று கிட்டதட்ட 120 நாட்கள் ஆகவுள்ள நிலையில், பல பாராட்டுகளும், அதே அளவிற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

நண்பர் அஜித்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய் | Cm Joseph Vijay Going To Meet Ajith In London

மேலும், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான கூட்டத்தொடர் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில், பல விதமான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டு இருந்தார். அதில், தமிழ்நாட்டில் மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கு நடிகரும் கார் பந்தைய வீரருமான அஜித் நன்றி தெரிவித்து வெளியிட்டிருந்த அறிக்கை வைரலானது.

லண்டன் பயணம்

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் நிலையில், வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விஜய் லண்டனில் இருப்பார் என கூறப்படுகிறது.

நண்பர் அஜித்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய் | Cm Joseph Vijay Going To Meet Ajith In London

அஜித் - விஜய்

சந்திப்பு இந்நிலையில், லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் தனது குழுவுடன் கலந்துகொள்ள போகிறார் என தகவல் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் விஜய்யும் அங்கு செல்லவிருப்பதால், அஜித்தை நேரில் சந்தித்து இருப்பதாகவும், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர் அஜித்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய் | Cm Joseph Vijay Going To Meet Ajith In London

அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம்

அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம்

தள்ளிப்போகும் பயணம்

இப்படியொரு தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், விஜய்யின் லண்டன் பயணம் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது என சொல்கின்றனர். காரணம், மலேசிய பிரதமர் வருகிற 10-ஆம் தேதி இந்திய வருகிறார். அதன்பின், 13-ஆம் தேதி சென்னைக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், அவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என்பதால், விஜய்யின் லண்டன் பயணம் தள்ளிப்போகும் என்கின்றனர்.

நண்பர் அஜித்தை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் விஜய் | Cm Joseph Vijay Going To Meet Ajith In London

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US