விஜய்யும் நானும் ஒரே காலேஜ்! ஆனால்.. உதயநிதி ஸ்டாலின் கூறிய விஷயம்
நடிகர் விஜய் கெரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென தான் நடிப்பதை முழுமையாக நிறுத்த போவதாக அறிவித்து, அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவியேற்று இருக்கிறார்.
மறுபுறம் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றுள்ளார்.
நேற்று கூடிய சட்டப்பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்று கொண்டனர். அதன் பிறகு விஜய் நேராக திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார் விஜய்.

இங்க நாங்க தான் சீனியர்
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரான நடிகர் உதயநிதி ஸ்டாலின் விஜய் பற்றி ஒரு விஷயத்தை கூறினார். "முதலமைச்சர் விஜய்யும் நானும் ஒரே காலேஜ். ஆனால் இங்க நாங்க தான் சீனியர்."
"எங்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம், நீங்களும் கேட்க தயாராக இருங்கள்" என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#Udhaynidhistalin: The Assembly Leader, Honourable Chief Minister, and Opposition Party leader.. all of us are from the same college.. But DMK is senior in governance.. We are ready to share our experience & knowledge.. TN's welfare is important.. pic.twitter.com/2bBn6HOKWj
— Laxmi Kanth (@iammoviebuff007) May 12, 2026
சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய் - பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமானின் நெகிழ்ச்சி பதிவு IBC Tamilnadu
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri