நடிகர் அஜித் அம்மா இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்...
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் தனித்துவமான வழியில் தனது பயணத்தை தொடர்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்.
நடிப்பை மட்டுமே செய்யாமல் தனக்கு பிடித்த கார், பைக் ரேஸ், போட்டோ கிராபி, சமையல், துப்பாக்கி சுடுதல் என நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸில் தனது குழுவுடன் போட்டிபோட்டு வென்று வருகிறார்.
துபாயில் சமீபத்தில் அஜித் கிரிக்கெட் விளையாடிய வீடியோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது, அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

விஜய் இரங்கல்
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் அம்மா மோஹினி மணி சென்னையில் இன்று காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், அருமை நண்பர் அஜித்குமாரின் தாயார் மோஹினி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்து தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri