முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்தில் மரணம்.. நேரில் சென்று CM அஞ்சலி
CM vijay family member passed away: முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா இன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.
முதலமைச்சர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜய், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து இன்று முதலமைச்சராக தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்.

குடும்பத்தில் மரணம்
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களின் குடும்பத்தில் மூத்தவர்களில் ஒருவராக இருக்கும், அவரது பெரியம்மா அமல் ராஜசேகர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

முதலமைச்சர் விஜய்யின் தந்தையான பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமல் ராஜசேகர். அவருடைய மறைவு செய்தியை அறிந்து உடனே நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். மேலும், விஜய்யின் பெற்றோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
போருக்காக வேலை செய்ய முடியாது... 22 நாடுகளில் போராட்டத்தில் குதித்த துறைமுகத் தொழிலாளர்கள் News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri