கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய்... த்ரிஷா வருகை

By Yathrika Aug 15, 2026 03:30 AM GMT
Report

CM விஜய்

2026, கடந்த மே மாதம் நடிகராக இருந்த விஜய் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரானார். 

அவர் பொறுப்பு ஏற்று 100 நாட்களை கடந்துவிட்டது, 100 நாட்களில் முதலமைச்சர் செய்த சாதனைகள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தன. இத்தனை வருட காலமாக ஒழிக்கவே முடியாது என கூறப்பட்ட லஞ்சம் வாங்கும் விஷயம் இப்போது ஒழிக்கப்பட்டுள்ளது.

பலரும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் சில விஷயங்களை பெற்றதாக பேட்டிகள் கொடுத்து வந்தனர்.

கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய்... த்ரிஷா வருகை | Cm Vijay Hoists The National Flag

த்ரிஷா என்ட்ரி

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது பணியை சிறப்பாக செய்துவரும் விஜய் முதன்முறையாக கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.

சுதந்திர நாளையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைக்க உள்ளார்.

அதனைக் காண மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோர் வருகைத் தந்துள்ளனர். அதேபோல் நடிகை த்ரிஷாவும் தனது அம்மாவுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர் விஜய்... த்ரிஷா வருகை | Cm Vijay Hoists The National Flag

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US