CM Vijay pays last respect to deva: மறைந்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.
தேவா
தேனிசை தென்றல், கானா பாடல்களின் கிங் என அழைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இசையமைப்பாளர் தேவா. இவர் இன்று காலை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேவாவின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
அஞ்சலி செலுத்திய விஜய்
சத்யராஜ், ரஜினிகாந்த், MK ஸ்டாலின், கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தேவா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேவா உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். மேலும், தேவா அவர்கள் இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில், அவருடைய இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.