3 மணி நேரத்தை தாண்டும் கோப்ரா ரன்டைம்! முக்கிய காட்சியை வெட்டிய சென்சார் போர்டு
சீயான் விக்ரமின் கோப்ரா படத்தின் சென்சார் முடிந்திருக்கிறது.
கோப்ரா
சீயான் விக்ரம் ரசிகர்கள் எல்லோரும் தற்போது கோப்ரா படத்தின் ரிலீசுக்காக தான்.காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் விக்ரம் பல விதமான கெட்டப்களில் நடித்து இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆன ட்ரைலருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதிலும் விக்ரம் தான் எதுவும் தெரியாத ஸ்கூல் வாத்தியார் என சொல்லும் காட்சி அப்படியே அந்நியன் படத்தை தான் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியது.

சென்சார், ரன்டைம்
தற்போது கோப்ரா படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்படுத்தி இருக்கிறது. படத்தின் மொத்த ரன்டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் கோப்ரா படத்தில் இருந்து லிப்லாக் முத்தகாட்சியையும் சென்சார் போர்டு கத்திரி போட்டிருக்கிறது. சில இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகளையும் மியூட் செய்து இருக்கின்றனர்.

சூர்யாவுக்கு ஜோடியான 30 வயது பாலிவுட் நடிகை! வெளியானது சூர்யா 42 நடிகர்களின் லிஸ்ட்..