மோசமான விமர்சனங்களை பெற்ற விக்ரமின் கோப்ரா மொத்தமே செய்த வசூல் இவ்வளவு தானா?
நடிகர் விக்ரம்
கதைக்கு என்ன தேவையோ கஷ்டப்படாலும் கலை என்ற ஒரே நோக்கத்தில் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என இருப்பவர் நடிகர் விக்ரம்.
அவர் இதுவரை நடித்த பல படங்களுக்காக நிறைய கஷ்டமான விஷயங்களை செய்துள்ளார், ஒரே ஒரு உதாரணம் என்றால் இது ஐ படம் தான்.
அந்த அளவிற்கு கடினமாக உழைத்து நடிக்கக்கூடியவர். இப்போது கோப்ரா என்ற திரைப்படத்தில் கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். படம் கதை ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் படத்தின் நீளம் பெரிய குறையாக இருந்தது.
தற்போது அதனால் படக்குழு 30 நிமிட காட்சிகளை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பட பாக்ஸ் ஆபிஸ்
தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம்.
வரும் நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
கடும் விமர்சனங்களை தாண்டி முதல் நாளில் விக்ரமின் கோப்ரா படம் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா? 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    