கோப்ரா திரைப்படம்
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தனி பாதையில் பயணிப்பவர். அதாவது வருடத்தில் ஒரு படம் கொடுக்க வேண்டும், காதல் காட்சிகள், நடனம் அமையும் படங்களில் நடிப்பது என இல்லாமல் தனது கலை பசிக்கு தீனி போடும் வகையில் இருக்கும் கதைகளில் நடிக்கிறார்.
அண்மையில் அவரது நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இதில் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்திருந்தார், இப்படம் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்களும் ஆசைப்பட்டார்கள்.

பட பாக்ஸ் ஆபிஸ்
ஆனால் படத்திற்கான வசூல் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பது தான் அனைவருக்கும் வருத்தம். முதல் நாளில் இருந்தே பட வசூல் குறைந்தே தான் இருந்தது.
13 நாட்களில் மொத்தமாக படம் ரூ. 55 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம். Digital மற்றும் Satelite உரிமம் மூலமாகவே போட்ட காசை எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்தேன்: அமலா பால் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    