முக்கிய இடத்தில் எதிர்பார்த்தை விட நல்ல வசூலை குவித்த கோப்ரா திரைப்படம் ! எங்கு தெரியுமா
கோப்ரா
விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நேற்று பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படம் கோப்ரா.
கிட்டத்தட்ட விக்ரம் திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் கோப்ரா திரைப்படத்தை காண காத்து கொண்டு இருந்தனர்.

தெலுங்கு மாநிலங்கள்
அதன்படி நேற்று வெளியானதில் இருந்து கோப்ரா திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சியை நீக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது கோப்ரா திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படம் அங்கு ரூ 3.5 கோடி வரை வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    