உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக குபேரன் மற்றும் கோலி சோடா 2 திரைப்படங்கள் ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்

colors tamil kuberan goli soda 2
By Kathick Aug 27, 2021 06:30 PM GMT
Report

பிற்பகல் 1 மணி மற்றும் 4 மணிக்கு இவற்றை கண்டுகளிக்க கலர்ஸ் தமிழ் – ஐ டியூன் செய்யுங்கள் சென்னை, 27 ஆகஸ்ட் 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில், இந்தவார இறுதி நாட்களில் குபேரன் மற்றும் சிறப்பு பார்ட்னர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வழங்கும் கோலி சோடா 2 ஆகிய அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும், திகிலூட்டும் திருப்பங்களுக்கும் நிறைந்த திரைப்படங்களை உலக தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக திரையிடப்படும் இந்த அதிரடி வெற்றிப்படங்கள் 2021 ஆகஸ்ட் 29 ஞாயிறு பிற்பகல் 1 மணிக்கும் மற்றும் 4 மணிக்கும் ஒளிபரப்பாகின்றன. அற்புதமான திரைக்கதை அமைப்பு மற்றும் திறன்மிக்க நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பு, பார்வையாளர்களை கட்டிப்போடும் என்பது நிச்சயம். அஜய் வாசுதேவ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த குபேரன் ஒரு ஆக்ஷன் – திரில்லர் திரைப்படமாகும். 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரணையும், நடிகை மீனாவையும் திரும்பவும் ஒன்று சேர்த்த திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு.

அத்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, கலாபவன் ஷஜோன் மற்றும் சித்திக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்திருக்கின்றனர். பாஸ் என்பவருக்கு (மம்முட்டியின் கதாபாத்திரம்) பணம் கடன் பட்டிருக்கின்ற பிரதாபாவின் (கலாபவன் சஜோன் நடிப்பில்) கதையை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. தனது கடனை திரும்பச் செலுத்த மறுக்கும் பிரதாபா, பாஸை மோசடியாக ஏமாற்றுகிறார். பழிவாங்கத் துடிக்கும் பாஸ், பிரதாபாவின் வாழ்க்கையில் கடும் நாசத்தை விளைவிக்கிறார்.

அதன்பிறகு பாஸின் கடந்தகால வாழ்க்கையை சொல்லும் திரைப்படம், பிரதாபாவுடன் கடைசியில் எப்படி இதை சரிசெய்கிறார் என்பது திரைக்கதையின் எஞ்சிய பகுதியாக அதிரடி திருப்பங்களுடன் அமைகிறது. 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து பலத்த வரவேற்பை பெற்ற கோலி சோடாவின் தொடர்ச்சியாக கோலி சோடா 2 விஜய் மில்ட்டனின் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் டிராமாவாக வெளிவந்தது. சமுத்திரகனி, கௌதம் மேனன், பரத் சீனி, எசக்கி பரத் மற்றும் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்திருக்கின்றனர்.

மிகப்பெரிய சாவல்களை எதிர்கொள்கின்ற சாதாரண மனிதர்களைச் சுற்றி இக்கதை நகர்கிறது. புதிய முகங்களை அறிமுகம் செய்வதற்காக பாராட்டுப்பெற்ற கோலி சோடா 2 திரைப்படத்தில் எட்டு திரைப்பட இயக்குனர்கள் நடிகர்களாக அவதாரம் எடுத்திருக்கின்றனர். ஒரு டாக்சி டிரைவரான சிவன் (வினோத் நடிப்பில்), ஒரு ரௌடியான மாறன் (பரத் சீனி நடிப்பில்) மற்றும் ஊழல் அரசியல்வாதிகள், ரௌடி கும்பல்களின் தலைவன்கள், ஜாதி பாகுபாடுகள் என அனைத்து தடைகளையும் மீறி, அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு போராடுகின்ற ஒரு தடகள வீரரான ஒலி (இசக்கி பரத் நடிப்பில்) ஆகியோரைச் சுற்றி திரைக்கதை பரபரப்பாக நகர்கிறது.

ஆகஸ்ட் 29 வரும் ஞாயிறன்று குபேரன் திரைப்படத்தில் பாஸ் எப்படி பழிவாங்குகிறார் என்பதைக் காணவும் மற்றும் கோலி சோடா 2-ல் அந்த சாமான்ய மனிதர்கள் அவர்களது வாழ்க்கையை எப்படி மீண்டும் உருவாக்குகின்றனர் என்று பிற்பகல் 1 மணி மற்றும் 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறவாதீர்கள்.

அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகளைக் கண்டுமகிழ VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம். 

உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக குபேரன் மற்றும் கோலி சோடா 2 திரைப்படங்கள் ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் | Colors Tamil Two Movies First Time Telecast


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US