பிரபல கலர்ஸ் தமிழின் சூப்பர் ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது - வருத்தத்தில் ரசிகர்கள்
வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியம் இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிரியல்களுக்கும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
ஆம் விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, கலர்ஸ் தமிழ் என முன்னணி தொலைக்காட்சிகள் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் கதைக்களத்தில் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
இதில் கடந்த 1 வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் உயிரே. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் உயிரே சீரியல் முடிவடைய போகிறது என ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் தங்களது சீரியல் படப்பிடிப்பில் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் இந்த சீரியலின் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.