கலர்ஸ் தமிழ் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-ல் பேராசிரியர் ஞானசம்பந்தத்தை வரவேற்கும் குஷ்பு மற்றும் பிருந்தா மாஸ்டர்
தமிழ் மக்களுக்கு மிகவும் பிரபலமான பேராசிரியர் திரு ஞானசம்பந்தத்தை நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் குஷ்பு மற்றும் பிருந்தா மாஸ்டர் இடம்பெறும் புதிய புரொமோவை கலர்ஸ் தமிழ் வெளியிட்டிருக்கிறது
சென்னை, செப்டம்பர் 9, 2021: தமிழகத்தின் சிறந்த பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், விரைவில் வெளிவரவிருக்கும் டான்ஸ் ரியால்டி நிகழ்ச்சியான டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-வில் பிரபல பேராசிரியர் திரு. G. ஞானசம்பந்தன் அவர்களை களமிறக்க உள்ளது. சின்னத்திரை செயல்தளத்தில் புதிய தர அளவுகோல்களை நிறுவவிருக்கும் இந்த பிரபலமான நிகழ்ச்சியில் நடுவர்களாக புகழ்பெற்ற நடிகை குஷ்பு மற்றும் பெரிதும் மதிக்கப்படுகிற நடன அமைப்பாளரான பிருந்தா மாஸ்டர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த சமீபத்திய புரொமோ, பேராசிரியர் ஞானசம்பந்தத்தை இந்நிகழ்ச்சிக்கு இந்த இரு நடுவர்களும் அன்போடு வரவேற்பதை காட்டியிருப்பதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பேராசிரியரான ஞானசம்பந்தத்தின் இனிமையான, நகைச்சுவையான கருத்துகளை கேட்டு இரசிப்பதற்கு டான்ஸ் vs டான்ஸ் என்ற இந்த நடன ரியால்டி நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி, எப்போதும் போல பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் நடனங்களின் மூலம் இந்நிகழ்ச்சி மெய்மறக்கச் செய்வது நிச்சயம்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பேராசிரியர் திரு ஞானசம்பந்தன் கூறியதாவது: “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபல டான்ஸ் ரியால்டி நிகழ்ச்சியான டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2- இல் நானும் ஒரு அங்கமாக இடம்பெறுவதில் எனக்கு பெருமகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இந்நிகழ்ச்சியில் எனது பங்கு பார்வையாளர்களுக்கு வியப்பூட்டும் விதமாக சிறப்பாக இருக்கும். அத்துடன் இந்நிகழ்ச்சி நிச்சயமாக பெரும் பாராட்டையும் புகழையும் எனக்கு கூடுதலாக கொண்டுவந்து சேர்க்கும் என எண்ணுகிறேன். இந்நிகழ்வில் திரைப்படத்துறையின் பிரபல கலைஞர்களான நடிகை குஷ்பு மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோரோடு இணைந்து செயல்படுவது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும், வளர்ந்துவரும் திறன்மிக்க நடனக்கலைஞர்களின் நடனத்தை நான் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியுடன் நான் பங்குபெறும் இச்சிறப்பான நிகழ்வு எனக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பினை தந்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”.
டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சி குறித்து மேலதிக நிகழ்நிலைத் தகவல்களை அறியவும் மற்றும் உங்களுக்காக இந்நிகழ்ச்சியில் திரு. ஞானசம்பந்தன் வெளிப்படுத்த விருக்கும் வியப்பூட்டும் விஷயங்களை அறிந்து கொள்ளவும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தொடர்ந்து பாருங்கள். கீழ்வரும் அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகள் மற்றும் டிடீஹெச் தளங்களில் கிடைக்கிற கலர்ஸ் தமிழின் பிற சிறப்பான நிகழ்ச்சிகளையும் தவறவிடாதீர்கள் - சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.