70 வயது நிறைவு, பீமரத சாந்தி திருமணம் செய்த நடிகர் செந்தில்- அவரது மொத்த குடும்ப போட்டோ
நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவில் இப்போது வரும் காமெடியன்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் தான் நடிகர் செந்தில்.
தனியாக இவரது காட்சிகள் க்ளிக் ஆனதை விட கவுண்டமணி-செந்தில் இருவரும் இணைந்து செய்த காமெடிகள் தான் இப்போதும் மக்களிடம் அதிகமாக பேசப்படுகிறது.
முதலில் மதுபான கடையில் பணிபுரிந்த செந்தில் பின் நாடகத்தில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நுழைந்த செந்தில் பயணம் எப்படி அமைந்தது என்பது நமக்கே தெரியும்.

மீண்டும் திருமணம்
1984ம் ஆண்டு நடிகர் செந்தில் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் செந்தில் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நேரத்தில் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்பிகா சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் செந்தில்-கலைச் செல்விக்கு பீமரத சாந்தி பூஜை நடத்தியுள்ளனர்.
70 வயதில் பீமரத சாந்தி பூஜை செய்தால் நல்ல ஆயுள் கிடைக்கும் என்கின்றனர். அண்மையில் நடிகர் செந்திலும் இந்த பூஜையை செய்து மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது மொத்த குடும்பமும் கலந்துகொண்டுள்ளனர்.

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri