காமெடியன் தாடி பாலாஜி மனைவி நித்யா திடீரென கைது?- ரசிகர்கள் ஷாக்
நடிகர் தாடி பாலாஜி
தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இடம்பெறுபவர் தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நித்யா
நித்யா மாதவரம் அடுத்து பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்தி இருக்கிறார்.
தற்போது கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியாக அவரை மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.